டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் 6வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்ததால் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,April 02 2020]
டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாடொன்றில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்களில் பரிசோதனை செய்யப்பட்ட பலருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் இருந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆறாவது மாடியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் திடீரென அவர் அந்த அறையின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்,
இந்த நிலையில் அந்தப் பக்கமாக வந்த மருத்துவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்றினார். தற்போது அந்த நபருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றாக காற்று வர வேண்டும் என்பதற்காக ஜன்னலை திறந்து வைத்திருந்தாகவும் கொரோனா பாதிக்கப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் திறந்திருந்த ஜன்னல் வழியாக குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது