சுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தற்போது போதைப்பொருள் வழக்காக மாறி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் தற்கொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலியும் நடிகையுமான ரியா, திடீரென நேற்று போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ரியா கைது குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி பதிவு செய்த ஒரு டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டில் கூறியதாவது:
நடிகை ரியா, சுஷாந்துக்கு தெரியாமல் போதைப்பொருளை தேநீரில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அதில் ஒரு திருத்தம். சுஷாந்த் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருப்பார் என பதிவு செய்துள்ளார். சுஷாந்த் குறித்த டாப்ஸியின் இந்த டுவிட் சுஷாந்த் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Correction. She wasn’t consuming. Financing and procuring for Sushant. So in that case if he was alive he would’ve been put behind bars too ? Oh no. She must’ve forced the drugs onto him. Sushant must’ve been force fed marijuana. Yes that’s what it is exactly. We did it guys ???? https://t.co/6f8l7DncuI
— taapsee pannu (@taapsee) September 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments