வெள்ளாவி அழகு… நடிகை டாப்ஸின் தோற்றத்தைப் பார்த்து கிறங்கிய ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,June 29 2023]

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்து ரசிகர்கர்களிடையே வேறலெவலில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இவருடைய சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலான நிலையில் ரசிகர்கள் தாறுமாறான கமெணட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிவந்த டாப்ஸி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிப் பின்னர் தமிழில் ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‘வந்தான் வென்றான்‘, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ எனப் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். இதற்கிடையே இந்தி சினிமாவில் கவனம் செலுத்திவந்த அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்து தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை டாப்ஸி நடிப்பில் ‘ஹசீன் தில்ரூபா’ எனும் திரைப்படம் ஜுலை 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை டாப்ஸி வெள்ளை நிற சேலையணிந்த கவர்ச்சி புகைப்படங்களைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதுகுறித்து ஹசீன் தில்ரூபா திரைப்படத்தில் நடிகை டாப்ஸி இந்தத் தோற்றத்தில்தான் இருக்கிறார் எனக் கருத்து தெரிவித்த ரசிகர்கள் ‘வெள்ளை நிறத்தில் எங்கள் மனதை கொள்ளை கொள்கிறார்‘ என்பதுபோன்ற கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர். பரந்து விரிந்த வானத்திற்கு நடுவே மயங்கும் சூரியனில் நடிகை டாபஸ் வெள்ளை நிற சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

இயக்குநர் வினித் மேத்யூ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஹசீன் தில்ரூபா’ திரைப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இதைத் தவிர நடிகர் ஜெயம் ரவியுடன் ‘ஜன கன மன’ திரைப்படத்திலும் இந்தியில் அராஷாத் சையத் இயக்கத்தில் ‘வோ லட்சி ஹை கஹான்‘, ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டன்கி‘, பரத் நீலகண்டன் இயக்கத்தில் ‘ஏலியன்‘ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.