ஒரு முடிவே இல்லையா? ஊர் சுற்றும் இளம் நடிகையிடம் பொறாமை பட்ட நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடைய சோஷியல் மீடியா பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை நாள்தான் விடுமுறையில் இருப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பன்னு தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா’ எனப் பல படங்களில் நடித்துவந்த நடிகை டாப்ஸி தொடர்ந்து பாலிவுட் மற்றும் மலையாள சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்தியில் ‘பிங்‘, ‘நாம் ஷபானா’, ‘சூர்மா’, ‘முல்க்’, ‘மன்மர்சியான்’, ‘தப்பட்’ என்று விமர்சன ரீதியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார். அதேபோல ‘கேம் ஓவர்’, ‘சாந்த்கி ஆன்க்’, ‘பட்லா‘ போன்ற கமர்ஷியல் வெற்றிப்படங்களில் நடித்தும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் தற்போது ‘ப்ளர்’, ‘டோபரா’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது சகோதரி ஷகுன்- னுடன் இணைந்து அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் எனப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்த இந்த சகோதரிகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அமெரிக்க சுற்றுலா குறித்து பதிவிட்டுள்ள நடிகை டாப்ஸி பல்வேறு ஆங்கில திரைப்படங்களில் பார்த்து பழகிய இடங்கள், சலிப்பை தரவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸியின் சுற்றுலா புகைப்படங்களை கடந்த ஒரு வாரமாக பார்த்து வரும் நெட்டிசன்கள் சிலர் ‘இதற்கு ஒரு முடிவே இல்லையா? பொறாமையாக இருக்கிறது‘ என கமெண்ட் பதிவிட்டு இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments