close
Choose your channels

வெள்ளாவி நடிகை டாப்ஸியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் இடம்பெற்ற “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?“ பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை டாப்ஸி பன்னு. அதற்குப் பிறகு தல அஜித் நடிப்பில் வெளியான “ஆரம்பம்“ திரைப்படத்திலும் “வந்தான் வென்றான்“, “காஞ்சனா3“ போன்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் பிசியான நடிகையாக வலம் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “அனபெல் சேதுபதி“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தவிர இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “சபாஷ் மிது“ திரைப்படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார். ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தவிர தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள நடிகை டாப்ஸி தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் “தட்கா“, “பேட்ல“ “பிளர்“, “லுப் லப்பேட்டா“, “தோபாரா“ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் அவர் தமிழில் நடிகர் சிம்புடன் இணைந்து “கான்“ திரைப்படம் மற்றும் “ஏலியன்“, “ஜன கண மன“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியான நடிப்பிற்கிடையே நடிகை டாப்ஸி சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை டாப்ஸி தற்போது புது போட்டோஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment