தொப்புள் கருத்துக்காக மன்னிப்பு கேட்ட நடிகை டாப்சி
Saturday, July 15, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி என பிசியான நடிகையாக மாறினார். அவர் பாலிவுட்டில் நடித்த 'பிங்க்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருடைய நடிப்புக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தென்னிந்திய படங்களில் உள்ள கவர்ச்சி காட்சிகள் குறித்தும் தொப்புள் காட்சிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை அவர் தெரிவித்திருந்தார். தன்னுடைய முதல் படத்தை இயக்கிய இயக்குனர் தனது இடுப்பில் தேங்காயை வீசுவது போன்ற காட்சியை படமாக்கினார் என்றும் இது எப்படி கவர்ச்சியான காட்சி என்று தனக்கு புரியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
டாப்சியின் இந்த கருத்து தென்னிந்திய திரையுலகினர் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நடிகை டாப்சி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment