ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,August 21 2019]

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் தமிழகம் முழுவதும் திருப்திகரமாக இருப்பதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது 'என்றென்றும் காதல்', 'மனிதன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் தற்போது கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை டாப்ஸி இணைந்துள்ளார்.

இந்த படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் கலந்த படம் என்றும், இந்த படத்தில் ஜெயம் ரவி, டாப்ஸி ஆகிய இருவரும் இண்டலிஜெண்ட் ஏஜெண்டுகள் கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெறவிருப்பதாகவும் இதில் ஜெயம் ரவி, டாப்ஸி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.