இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அரைஇறுதிக்குள் நுழைந்து வெற்றியைக் கொண்டாடி வருகிறது.
டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 “பி“ அணியில் இடம்பெற்ற பாகிஸ்தானுடன் விளையாடிய இந்தியா முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்தது. அடுத்து நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் தோல்வி. இதனால் துவண்டுபோன இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடி நல்ல ரன் ரேட்டிங்கை வைத்திருந்ததால் ஒரு சிறிய நம்பிக்கையுடன் வலம் வந்தனர்.
அந்த அடிப்படையில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறும் போட்டியில் தோல்வியடைய வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் ரன் ரேட்டிங் அடிப்படையில் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்துவிடலாம். இதுவே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் கனவாக இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மாஸ் வெற்றிப் பெற்று தற்போது அரைஇறுதிக்குள் நுழைத்துவிட்டது.
இதையடுத்து குரூப் “பி“ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் குரூப் “ஏ“ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இந்தியா அரைஇறுதி வாய்ப்பை நழுவவிட்டதையடுத்து, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் வருத்ததை வெளியிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தோல்விக்கு காரணம் காட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்களும் அதிகரித்து இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com