டி-20 உலகக்கோப்பை போட்டிகள்!!! ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி-20 உலகக்கோப்பை குறித்தான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டு நடக்கவிருந்த 2020 டி-20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 2021 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியக் கூட்டத்தை தொடர்ந்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில் “கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்ட நிகழாண்டுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் 2022-ஆம் ஆண்டு நடைபெறும் என்பதை ஐசிசி வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டப்படி நடத்தப்படும். மேலும், நியூசிலாந்தில் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆண்டிற்கு அந்த தொடரை ஒத்தி வைத்துள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments