டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியலை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை இன்று பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் இந்திய அணி சிறப்பு குரூப் பி அணியில் இடம்பிடித்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி முதல் போட்டியிலேயே (அக்டோபர் 24 ஆம் தேதி) பாகிஸ்தானுடன் மோத இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கியமான கோப்பைகளை இந்திய அணி தவறவிட்ட நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதைத்தவிர கேப்டன் விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் இதுவே கடைசி கேப்டன்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மகேந்திர சிங் தோனி இதில் சிறப்பு மென்டராக செயல்பட உள்ளார். இப்படி அடுக்கடுக்கான தகவல்களுக்கு இடையில் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாடவுள்ள ஜெர்சியை இன்று பிசிசிஐ வெளியிட்டது.
மேலும் ஏற்கனவே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியலை பிசிசிஐ அறிவித்துவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதைத்தபிர தற்போது உலகக்கோப்பை போட்டிக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டியாவிற்கு பதிலான அவேஷ் கான் அல்லது வெங்கடேஷ் ஐயர் அணியில் இடம்பிடிக்கலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது. இதற்கு முன்பு அக்ஷர் படேலுக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்று பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
?? NEWS ??: Shardul Thakur replaces Axar Patel in #TeamIndia's World Cup squad. #T20WorldCup
— BCCI (@BCCI) October 13, 2021
More Details ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments