டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்ற 7 ஆவது டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி துவங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. தகுதிச்சுற்று மற்றும் முக்கியச் சுற்றுகள் கொண்டதாக நடத்தப்படும் இந்த போட்டியில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.
மேலும் ஐபிஎல் போட்டிகள் முடிந்த கையோடு டி20 உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதால் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தகுதிச்சுற்று குரூப் ஏ பிரிவில் – அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை அணிகள் மோதவுள்ளன. தகுதிச்சுற்று குரூப் பி பிரிவில்- பங்களாதேஷ், ஓமன், பப்புவா நியூகினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இதில் தேர்வாகும் ஒவ்வொரு பிரிவின் முதல் இரண்டு அணிகளும் மீண்டும் முக்கிய அணிகளுடன் போட்டிப்போடும்.
தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிந்தவுடன முக்கியச் சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். இதில் குரூப்1 இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு வங்கம் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றிப்பெற்ற இரண்டு அணிகள் விளையாடும்.
அடுத்த சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றிப்பெற்ற இரண்டு அணிகள் இடம்பெறும். இந்த சூப்பர் 12 சுற்றில் வெற்றிப்பெறும் ஒவ்வொரு பிரிவின் முதல் இரண்டு அணிகளும் இறுதியாக அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
இதையடுத்து வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அடுத்து நவம்பர் 11 ஆம் தேதி அடுத்த அரையிறுதிப்போட்டி நடத்தப்பட்டு இறுதிப்போட்டி வரும் நவம்பர் 14 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments