தமிழ் திரையுலகில் திடீரென கிளம்பிய இந்தி எதிர்ப்பு: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Sunday,September 06 2020]

இந்தியா முழுவதும் பேசக் கூடிய மொழியாக இந்தி இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி எதிர்ப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை தவிர இங்கு வேறு மொழிக்கும் இடமில்லை என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் பல ஆண்டு கொள்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஹிந்தி திணிப்பு போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருவதும் தெரிந்ததே. இந்தநிலையில் தமிழ்த் திரையுலகில் திடீரென ஹிந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை திரையுலக பிரபலங்கள் அணிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, 'I am a தமிழ் பேசும் Indian' என்ற வாசகங்களுடன் கூடிய டீ சர்ட்டும், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி ஆகியோர்களும் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்டுகளை அணிந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக கிகி அணிந்துள்ள ‘இந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட்டுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

யுவன் சங்கர் ராஜா, கிகி ஆகியோர்களை தொடர்ந்து மேலும் ஒரு சில திரையுலக பிரபலங்களும் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட் அணிந்து வருவதால் இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது