அத்திவரதர் அருளால் சிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,August 10 2019]

கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியில் இருந்து சாதாரண குடிமகன்கள் வரை தினமும் அத்திவரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என பல்துறைகளில் கால்பதித்த டி.ராஜேந்தர் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகை தந்திருந்தார். அத்திவரதரை தரிசித்த பின்னர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அத்திவரதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். மக்கள் அத்திவரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சிலம்பரசன் எனக்கு போன் செய்து அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து விட்டீர்களா? என கேட்டார். என்னுடைய வேண்டுதல் எல்லாம் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். நான் எந்த பெண்ணை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆனால் அப்பெண் சிலம்பரசனுக்கு பிடித்த பெண்ணாகவும் அவர் மனதிற்கு ஏற்ற பெண்ணாகவும் அமைய வேண்டும். எனக்கு அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிலம்பரசனுக்கு கிடைக்க அத்திவரதர் தான் வழிகாட்டவேண்டும்’ இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.