தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: டி.ராஜேந்தர் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என பிரிந்தது என்பதும் அந்த சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் உடைபட்டு ’தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’ என பிரிந்தது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த சங்கத்துக்கு டி ராஜேந்தர் தலைவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிரடியாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து டி ராஜேந்தர் ராஜினாமா செய்துவிட்டார். இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் சதீஷ்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவராக திரு ராஜேந்தர் அவர்கள் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார். மேலும் அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் தலைவர் பதவி வகிக்க முடியாத சூழலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தனது அறிக்கையில் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments