தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: டி.ராஜேந்தர் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என பிரிந்தது என்பதும் அந்த சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் சங்கம் உடைபட்டு ’தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’ என பிரிந்தது என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த சங்கத்துக்கு டி ராஜேந்தர் தலைவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிரடியாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து டி ராஜேந்தர் ராஜினாமா செய்துவிட்டார். இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் சதீஷ்குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவராக திரு ராஜேந்தர் அவர்கள் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார். மேலும் அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் தலைவர் பதவி வகிக்க முடியாத சூழலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தனது அறிக்கையில் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

More News

ஜெயம் ரவியின் 'பூமி' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது திரையங்குகள் திறக்கப்பட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை

ஊரடங்கால் பண நெருக்கடி, கடன் தொல்லை: ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய இளைஞர்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடன் தொல்லை மற்றும் பண நெருக்கடியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது

எம்ஜிஆர் உயிருடன் வந்துவிட்டாரா? 'தலைவி'யின் ஆச்சரியமான புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

16 வயது சிறுமியை சீரழித்த 600 பேர்: மதுரையில் ஒரு கொடூரம்!

பெண்களுக்கு எதிராகவும் பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற

உருமாறிய கொரோனாவால் சென்னைக்கும் பாதிப்பா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!

டிசம்பர் 21 ஆம் தேதி பிரிட்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது.