சிம்பு-த்ரிஷா திருமணமா? பதில் சொல்ல மறுத்த டி.ராஜேந்தர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அவருக்கு பொருத்தமான மணப்பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்து வருகின்றனர் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
மேலும் சிம்பு திருமணம் செய்யப்போகும் மணமகள் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளிவந்து அதனை அவரது தந்தை டி ராஜேந்தர் மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை இன்று டி ராஜேந்தர் சந்தித்தார். அப்போது நிருபர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து கேள்வி கேட்டபோது இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த டி ராஜேந்தர் தண்ணீரை பருகியபடி அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
சிம்புவின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே அவர் யாரை திருமணம் செய்கிறார் என்பது தெரிய வரும் என்பதும் அதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்துமே வதந்திகளாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
நடிகர் சிம்பு-திரிஷாவுக்கு திருமணமா...? - டி.ராஜேந்தர் #Silambarasan | #Trisha | #TRajendarhttps://t.co/UB7U8Ka7M8
— Thanthi TV (@ThanthiTV) October 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com