கமல்ஹாசன் - டி.ராஜேந்தர் சந்திப்பு! மகன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

பிரபல இயக்குனரும் நடிகருமான திரு டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமணம் இம்மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கடந்த சில நாட்களாக திரையுலக, அரசியல் பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்பட பல திரையுலக பிரமுகர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த டி.ராஜேந்தர் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி ஆகியோர்களிடம் அழைப்பிதழை வழங்கி தனது மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை இயக்குனர் டி.ராஜேந்தர் இன்று தனது இளைய மகன் குறளரசனுடன் சந்தித்தார். தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கமல்ஹாசனுக்கு நேரில் வழங்கினார். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக கமல்ஹாசனும் கூறியுள்ளார்.