நடிச்ச பெண்ணா? பிடிச்ச பெண்ணா? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் திருமண வரவேற்பு வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து டி.ராஜேந்தர் பல பிரபலங்களை சந்தித்து நேரில் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினிகாந்த், விஜயகாந்த், சூர்யா, கார்த்தி உள்பட பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து முடித்துவிட்ட டி.ராஜேந்தர், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'என்னுடைய இளையமகன் குறளரசன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க செல்லும் இடங்களில் எல்லாம், சிம்புவுக்கு எப்போது திருமணம் என கேட்கின்றனர். சிம்புவுக்கு அவருடன் நடிச்ச பெண்ணை திருமணம் செய்து வைப்பதைவிட பிடிச்ச பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். அவருக்கு பொருத்தமான, ஜாதகம் பொருந்திய பெண்ணை பார்த்து வருகிறேன். விரைவில் இறைவன் அருளால் அவருக்கு பெண் கிடைக்கும் என நம்புகிறேன்' என்று கூறினார்.
மேலும் தன்னுடைய திருமணம் தாமதம் ஆவதால் தன்னுடைய தம்பி, தங்கைகளின் திருமணம் தடைபட வேண்டாம் என்ற எண்ணம் உடையவர் சிம்பு. அதனால் தனது தங்கை, தம்பிக்கு திருமணம் என்றதும் அவர் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அவருடைய நல்ல பண்பான மனதுக்கு விரைவில் நல்ல பெண் கிடைப்பார் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com