தயாரிப்பாளர் சங்க தேர்தலில் களமிறங்கும் பிரபலம்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,October 11 2020]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அன்று மாலையே வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அக்டோபர் 24ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அக்டோபர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் விஷால் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவரும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னை, காஞ்சிபுரம் விநியோகிஸ்தர் செயற்குழு கூட்ட முடிவின்படி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகிய இருவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

More News

தலைவியாய் கூட அல்ல; மனுஷியாய் மதிக்க வேண்டாமா?  வைரமுத்து ஆவேசம்

கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை நாற்காலியில் உட்கார வைக்காமல்

'தளபதி 65' படத்துடன் கனெக்சன் ஆன சிம்பு-சுசீந்திரன் திரைப்படம்!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதையும் பார்த்தோம் 

ஆணவத்துல ஆடாதிங்கடா: திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத் கணவர் பதிலடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத்தின் சோகக்கதையை கிண்டல் செய்த திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத்தின் கணவர் பதிலடி கொடுத்துள்ளதற்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புரோமோவிலும் ஹார்ட், புரோக்கன் ஹார்ட்டா? நெட்டிசன்கள் புலம்பல்! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றியதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் நிகழ்ச்சியில் திருப்தி இல்லை

கேதார் ஜாதவ் நீக்கப்பட்டும் தோல்வி: அப்ப தோல்விக்கு காரணம் யார்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதிய போட்டியில் கேதார் ஜாதவ்வின் ஆமை வேக ஆட்டத்தினால் தான் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து