வைரலாகும் டி ராஜேந்தரின் அமெரிக்க புகைப்படங்கள்: சென்னை திரும்புவது எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக மேல் சிகிச்சை பெற அமெரிக்கா சென்ற நிலையில் அவர் சென்னை திரும்புவது எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை அடுத்து சிம்புவும் அவரது குடும்பத்தினரும் டி ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சை செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதும் அதன் பின் அவரது உடல் நிலை படிப்படியாக குணமாகி வந்தது என்றும் செய்திகள் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து சிம்பு திரும்பிய நிலையில் டி ராஜேந்தர் சில நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் டி ராஜேந்தர் தற்போது முழுமையாக குணமாகி விட்டதாகவும் மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து டி ராஜேந்தர் கிளம்புகிறார் என்றும் நாளை அதிகாலை சென்னை வருவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout