ஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டியில் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு “யாக்கர் மன்னர்“ என்ற பாராட்டைப் பெற்றிருந்தார். அதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐபிஎல் போட்டிகளில் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவரும் இவர் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டார். பின்னர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூரு கிரிக்கெட் அகாடமி பயிற்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாக டிவிட் செய்த நடராஜன் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் பயிற்சியாளர்கள் 4 பேருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடிவரும் வீரருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments