யாக்கர் மன்னனுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அறிவுரை… என்ன சொன்னார் தெரியுமா?

அறிமுக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது உலகத்தின் பல ஜாம்பவான்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். காரணம் ஐபிஎல் மூலம் அடையாளம் பெற்ற இவர் ஒரே சுற்றுப் பயணத்தில் ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று விதமான போட்டிகளிலும் கலந்து கொண்டு மிகத் திறமையாக பந்து வீசினார். இவரது இடது கை யாக்கர் பந்து வீசும் முறையைப் பார்த்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் இடது கை பழக்கம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு சில அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார். மேலும் நல்ல உடல் தகுதியுடன் இதை மட்டும் கடைப்பிடித்தால் அடுத்த 5-7 வருடத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை அளித்து இருக்கிறார்.

நடராஜனைப் பற்றி கருத்துக் கூறிய இர்பான் “அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் கூடுதல் பலம். மாற்று பந்து வீச்சாக இவர்கள் பேட்ஸ் மென்களுக்கு வித்தியாசமான கோணத்தில் வீசி சிரமம் கொடுப்பார்கள். நடராஜன் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆயுதமாகத் திகழ்வார். அவர் தன் வேகம் ரிதம், கோணம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அவர் பந்து வீசும் போது பந்துக்கு பின்னால் தன் உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். முன்னால் விழுமாறு குனிந்து வீசக்கூடாது. பந்தை டெலிவரி செய்யும்போது உடலை பந்துக்கு பின்னால் வைத்துதான் வீச வேண்டும். அப்போதுதான் பந்தை உள்ளேயும் கொண்டு வர முடியும்” என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.

அதோடு, அவருடைய பலம் என்னவென்றால் பந்துவீச்சு ஆக்சன் எவ்விதத்திலும் மாறாமல் இருக்கிறது. இதன் மூலம் காயம் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகள் இருக்கிறது. நன்கு கவனம் செலுத்தினால் இன்னும் 5-7 வருடங்கள் வரை தொடர்ந்து அவரால் இந்திய அணியில் உடல் ஆரோக்கியத்துடன் விளையாட முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்தத் தகவலின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் நடராஜன் அதிகக் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்றும் பந்து வீசும் முறையில் சிறிய மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இர்பான் அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் அறிமுக வீரருக்கு இப்படி அறிவுரை வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

எம்.ஸ்.தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பயோபிக் திரைப்படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டது.

பொதுவெளியில் கொடுக்கப்பட்ட சரமாரி சவுக்கடி… என்ன காரணம்?

இந்தோனேஷியாவின் ஆச்சோ மாகாணத்தில் பொதுவெளியில் வைத்து நேற்று, 2 ஆண்களுக்கு தலா 77 சரமாரி சவுக்கடி கொடுக்கப் பட்டது.

'சூர்யா 40' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: மாஸ் அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

சூர்யா குறித்து கிளம்பிய திடுக்கிடும் வதந்தி: பிரபல இயக்குனர் விளக்கம்!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 

'ஆஸ்கார்' விருது வாங்க செலவு செய்யணுமா? நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்!

திரைத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பார்த்திபன் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது