நடராஜனுக்கு காயமா? டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் 3-1 என்று முன்னிலை பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இதனால் வரும் ஜுன் 8 ஆம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெற உள்ள இறுதி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியக் கிரிக்கெட் அணி கலந்து கொள்ள உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக 19 வீரர்கள் கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணியை கேப்டன் விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார். இதில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக யாக்கர் மன்னன் நடராஜன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டியில் நடராஜன் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி தகவல் வெளியிட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழங்கால் முட்டியில் காயம் மற்றும் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடராஜன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காயம் காரணமாக அவர் டி20 போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு இருக்கிறது. யாக்கர் பந்து வீச்சில் அபார திறமை கொண்ட நடராஜனுக்கு அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் ஒரு பெரும் திருப்பமாக அமைந்து என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு வலைப்பந்து வீச்சாளராக சென்ற நடராஜன் தன்னுடைய வேகப்பந்து வீச்சினால் 3 மாடல் போட்டிகளிலும் கலந்து கொண்ட வீரர் என்ற பெருமையை பெற்றதோடு தான் கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி உள்ள நிலையில் நடராஜன் குறித்த இறுதி முடிவு எதையும் பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments