ஒன்டே கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார் தமிழக வீரர் டி.நடராஜன்!!!

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் தமிழக வீரர் நடராஜன் விளையாட இருக்கிறார் என்ற தகவலை பிசிசிஐ உறுதிப்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் அருமையான யாக்கர்களை வீசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தனர். இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்தியக் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளனது. இதில் முதல் ஒருநாள் ஆட்டம் இன்று சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதன் சொந்த வீரர்கள் விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் முதல் ஆட்டத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என இந்திய வீரர்களும் விரும்புவர். இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற தகவலை பிசிசிஐ நேற்று நள்ளிரவு தெரிவித்தது.

இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பிசிசிஐ நவ்தீப் சைனிக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் எனத் தெரிவித்து உள்ளது. மேலும் விராட் கோலி, தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹ்ர்திக் பாண்ட்யா போன்ற முக்கிய வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
 

More News

நிஷா இன்னும் கேம் பண்ணவே இல்லை: நிஷா கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளேந்தியாக இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது நிஷா மட்டுமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. எதை சொன்னாலும் நம்பிவிடுவது

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு… 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

நிவர் புயல் கரையைக் கடந்தப் பின்பும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஒட்டிய பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இத நான் யார்கிட்டயும் சொல்லல: இரண்டாவது மனைவி குறித்து மனம் திறந்த பிக்பாஸ் சரவணன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் சரவணன் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் 46வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்டு விட்டார் என்பதும் தெரிந்ததே.

புதிய புயலால் வரப்போகும் பாதிப்பு… இந்திய வானிலையின் எச்சரிக்கை!!!

நிவர் புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பும் பின்பும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல வரும் நவம்பர் 29

அர்ச்சனா மடியில் ரியோ, தலைவாரி விடும் நிஷா: குரூப்பெல்லாம் இல்ல!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் எந்தவித குரூப்பும் இல்லை என்ற என நம்ப வைக்க அந்த குரூப்பில் உள்ளவர்கள் போராடி வரும் நிலையில் இன்றைய