ரஜினி படத்தை முந்திய சிரஞ்சீவி படம்!
- IndiaGlitz, [Wednesday,September 18 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரிக்குவித்தது. மேலும் சமீபத்தில் இந்த படம் சீனாவிலும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ.110கோடிக்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு சாட்டிலைட் உரிமை விலை போனது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த நிலையில் ‘2.0’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ.110 கோடிக்கு பெற்ற ஜீடிவி நிறுவனம் தற்போது ரூ.125 கோடிக்கு சிரஞ்சீவியின் ‘சயிர நரசிம்ம ரெட்டி’ படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே சாட்டிலைட் வியாபாரத்தில் ரஜினி படத்தை சிரஞ்சீவி படம் முந்திவிட்டது என்றே கூறலாம்.
'சயிர நரசிம்ம ரெட்டி’ படத்தை சுமார் ரூ.300 கோடி செலவில் ராம்சரண் தேஜா தயாரித்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மொழி தியேட்டர் ரிலீஸ் உரிமை மட்டுமே ரூ.140 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. தமிழக ரிலீஸ் உரிமையை சூப்பர்குட் பிலிம்ஸ் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதால் கிட்டத்தட்ட ராம்சரண் தேஜா இந்த படத்திற்காக செலவு செய்த பட்ஜெட்டை எடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.