இந்த அறிகுறி இருந்தாலும் உங்களுக்கு கொரோனாவாக இருக்கலாம்!!! அதிர்ச்சியூட்டும் புதுத் தகவல்!!!

கொரோனா நோய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது அறிகுறிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களை பாதிப்பதோடு அதன் தன்மையும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். முன்னதாக கொரோனா அறிகுறிகள் என அமெரிக்காவின் FDA சளி, காய்ச்சல், சவாசக் கோளாறுகளைச் சுட்டிக் காட்டியது. அதற்குபின்பு வாசனை மற்றும் சுவை உணர்வு அற்றுபோதல், கை-கால்களில் அரிப்பு ஏற்படுதல், தோலின் நிறம் மாறிபோதல் போன்றவையும் அறிகுறிகளாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல் வருவதற்கு முன்பே சில நரம்பியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என புது ஆய்வு ஒன்று அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது. அன்னஸ் ஆஃப் நேச்சுரல் அறிவியல் ஆய்விதழில் சில விஞ்ஞானிகள் கொரோனா நோய் முதற்கட்டமாக சில நரம்பியல் அறிகுறிகளையும் வெளிப்படுத்தும் என்ற தகவலை வெளியிட்டு உள்ளனர். மேலும் அந்தக் கட்டுரையில் கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலானவர்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு இல்லாமல் போதல், கவனச்சிதைவு, சோர்வு, வாசனை உணர்வு இல்லாமல் போதல், வலிப்பு வருதல், பக்க வாதம், பலவீனம் போன்ற குறைபாடுகள் அதிகமாக இருக்கின்றன. எனவே கொரோனா அறிகுறிகளில் நரம்பியல் பிரச்சனைகளும் அதிகப் பங்கு வகிக்கிறது எனத் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று உடலில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோயாக முதலில் புரிந்து கொள்ளப்பட்டது. அடுத்தடுத்த நேரங்களில் அது சுவாசப் பிரச்சனை மட்டுமல்ல, பல உடல் உறுப்புகளையும் சேதப்படும் என்ற அதிர்ச்சியையும் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி இருந்தனர். தற்போது இதை விஞ்சும் அளவிற்கு ஒரு புது ஆய்வு வெளியாகி இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று சுவாச உறுப்புகளை முதலில் தாக்குவதல் உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து போகிறது. அப்படி தலைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து போனால் மூளை, முதுகெலும்பு, நரம்பு மண்டலம், தலையில் உள்ள நரம்புகள் போன்ற அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். எனவே நரம்பியல் சம்பந்தமான அறிகுறிகள் இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை ஆய்வுக்குழுவின் தலைவர் இகோர் கோரல்னிக் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று தலைப் பகுதிகளில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதையும் விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியுள்ளனர். அதாவது நோய்த்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் போராடி தோற்றுப்போகும் போது அதுவும் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதனால் மூளைப் பகுதிகளில் கட்டி, இரத்த ஓட்டம் தடைபடுதல், வீக்கம் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும் என்ற அதிர்ச்சித் தகவலையும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சில நேரங்களில் ஏற்படும் தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, விழிப்பில்லாமல் இருத்தல் போன்ற நேரங்களிலும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.