'சயிரா நரசிம்மரெட்டி சென்சாரில் ஒரு ஆச்சர்யம்
- IndiaGlitz, [Monday,September 23 2019]
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் அக்டோபர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உட்பட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அமித் த்ரிவேதி இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாக போரிட்ட எதிர்த்துப் போரிட்ட ஒரு சுதந்திர போராட்ட வீரனின் வாழ்க்கை வரலாறு படமே இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்வையிட்டு படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியை கட் செய்யவில்லை என்பது ஆச்சரியம் தரவைக்கும் ஒரு செய்தியாகும். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து உலகம் முழுவதும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி இந்த படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது