'தல 59' படத்தில் நஸ்ரியாவின் கேரக்டர்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

 

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 59' படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பது தெரிந்ததே

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் 'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் நடிகை நஸ்ரியா தனது சமூக வலைத்தளத்தில் 'தல 59' படத்தில் தான் நடிப்பது உறுதி என்றும், அந்த படத்தில் தான் 'ஸ்வேதா' என்ற கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.