சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2: மொத்த ஸ்வீட்டையும் தானம் வழங்கிய கடை ஓனர்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே குரல் கொடுத்த நிலையில் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் பாராட்டு தெரிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத் மாநில ராஜ்கோட் நகரில் ஷிவ்சக்தி டெய்ரி என்ற ஸ்வீட் கடை வைத்துள்ள நபர் ஒருவர் இந்த தாக்குதல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த தனது கடையில் உள்ள மொத்த ஸ்வீட்டையும் அந்த வழியாக செல்பவர்களுக்கு இலசமாக கொடுத்துள்ளார். அந்த பகுதி வழியாக சென்ற அனைவரும் ஸ்வீட்டை வாங்கிவிட்டு 'பாரத் மாதாஜி' என்ற முழக்கமிட்டனர்.

More News

பக்கா பிளான்: எம்ப்ரேயர் விமானத்தால் சாத்தியமான சக்சஸ் தாக்குதல்

இன்று அதிகாலை இந்திய விமானப்படையின் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து வெற்றிகரமாக தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி திரும்பி வந்தன.

'தளபதி 63' தீபாவளி ரிலீஸில் திடீர் மாற்றம்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்தியாவின் பதிலடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

புல்வாமா தாக்குதலுக்கு பலியான 40 இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீரமரணத்திற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பாராட்டுக்கு குவிந்து வரும்

இந்திய தாக்குதலால் எந்த சேதமும் இல்லை: பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அண்டப்புழுகு

இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

உறவினர்கள் கூண்டோடு காலி! மசூர் அசார் தப்பி ஓட்டம்

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய வான்படை அதிரடி தாக்குதல் நடத்தி