செக்ஸ் சாம்பியன்ஷிப்… உடலுறவை விளையாட்டாக அறிவித்து, மிரள வைத்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக உடலுறவு குறித்து பேசுவதற்கே பலரும் கூச்சப்படும் நிலையில் உடலுறவு மேற்கொள்வதையே ஒரு விளையாட்டுப் போட்டியாக நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மத்திய ஐரோப்பிய நாட்டில் நடக்க இருக்கும் இந்த விளையாட்டு போட்டி குறித்து இணையவாசிகள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
உடலுறவு குறித்த விஷயங்களை பேசுவதற்கே இந்தியா போன்ற நாடுகளில் கடும் மனத் தடை இருந்து வருகிறது. ஆனால் மேற்கிந்திய நாடுகளில் செக்ஸ் குறித்த உரையாடல் ஓரளவிற்கு சகஜமான விஷயமாகக் கருதப்பட்டாலும் செக்ஸ் மேற்கொள்வதை வெளிச்சம் போட்டு பலருக்கு மத்தியில் காட்டுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் மத்திய ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் முதல் முறையாக உடலுறவுக் கொள்வதையே ஒரு விளையாட்டாக அறிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்வீடனில் செக்ஸ் சாம்பியன்ஷிப் பெடரேஷன் எனும் ஒரு விளையாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த விளையாட்டு அமைப்பில் செக்ஸ் மேற்கொள்ளும் ஜோடிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வரை நடத்தப்படும் இந்த போட்டியில் சிறந்த ஜோடி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இதில் பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களும் இருப்பார்கள் என்பதுதான் இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
இதுவரை 20 போட்டியாளர்கள் இந்த ‘ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு விண்ணப்பித்து இருக்கும் நிலையில் 70% வாக்குகளை பார்வையாளர்களும் 30% வாக்குகளை நடுவர்களும் அளிக்க உள்ளனர்.
மேலும் பல வாரம் நடக்க இருப்பதாகக் கூறப்படும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களது துணையை கவர்தல், உடல் மசாஜ், ஓரல் செக்ஸ், சகிப்புத்தன்மை என்று 16 பிரிவிகளில் சோதிக்கப்பட இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com