சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியா? ஜெ. நினைவிடத்தில் விஷம் குடித்த அதிமுக தொண்டர்

  • IndiaGlitz, [Saturday,December 31 2016]

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போதிலும் பல அதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் ஒரு மேடையில் கூட ஏறாத சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த சுவாதி ஆனந்த் என்ற அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்., உடனே அங்கிருந்தவர்கள் விஷம் குடித்த தொனரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலா நடராஜன், அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 100 பேர் இன்று தங்களது பதவியை கூட்டாக ராஜினாமா செய்தனர்.