சின்மயி-வைரமுத்து விவகாரம்: ஸ்வர்ணமால்யாவின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு தற்போது கோலிவுட் திரையுலகை மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் திரையுலகின் மூத்த கலைஞராக இருந்தாலும் வைரமுத்துவுக்கு வெளிப்படையாக யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக பிரபல நடிகைகள் உள்பட பல திரையுலகினர் சின்மயிக்கு ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தா, வரலட்சுமி, கஸ்தூரி, உள்பட பல திரையுலகினர் சின்மயிக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தற்போது நடிகை ஸ்வர்னமால்யாவும் ஆதரவு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பிரச்சனையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

தற்போது நவராத்திரி விழா ஆரம்பமாகியுள்ள நிலையில் துர்கா, சரஸ்வதி, லட்சுமியுடன் இந்த பிரச்சனையை ஒப்பிட்ட ஸ்வர்ணமால்யா, இந்த பிரச்சனையை சட்டரீதியாக அணுகுவது எப்படி என்பது குறித்து தான் ஒரு திட்டம் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து சட்டவல்லுனர்களிடம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் தங்களின் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எழுச்சியை பார்க்கும்போது இனி திரையுலகில் மட்டுமின்றி எந்த துறையில் உள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்பவர்கள் அச்சப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.