ரஜினி இப்போதைக்கு எம்.எல்.ஏ மட்டும் ஆகலாம், முதல்வராக முடியாது: பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக கூறிய நிலையில் இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை மெரீனாவில் சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறியதாவது:
ரஜினி இப்போதைக்கு எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அவர் தமிழக முதல்வராவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் கடுமையாக உழைக்க அவரது உடல்நலம் ஒத்துழைக்குமா? என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார். மேலும் ரஜினியை பாஜக, அரசியலில் பயன்படுத்தி கொள்ளுமா என்பது குறித்து, அமித் ஷா தான் முடிவு செய்வார்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout