படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது

இந்த கருத்துக்க்கு பலமுனைகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை அடுத்து  எஸ்.வி.சேகர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நண்பர் ஒருவர் எழுதிய பதிவை படிக்காமல் முகநூல் பக்கத்தில் பார்வேர்டு செய்துவிட்டதாகவும், . மற்றொரு நண்பர் அதனை படித்துவிட்டு தவறாக இருக்கிறது என சுட்டிக்காட்டியவுடன் அதனை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். தனிமனித ஒழுக்கத்திற்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனிமனித விமர்சனங்களில் தனக்கு என்றும் விருப்பம் கிடையாது என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் தான் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த பதிவை நீக்கிவிட்ட பின்னரும் தொடர்ந்து ஸ்கீரின்ஷாட் எடுத்து போடுபவர்களுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாகவும் எஸ்.வி.சேகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More News

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளது.

பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்து வருகிறார்.

பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,.