படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது
இந்த கருத்துக்க்கு பலமுனைகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை அடுத்து எஸ்.வி.சேகர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நண்பர் ஒருவர் எழுதிய பதிவை படிக்காமல் முகநூல் பக்கத்தில் பார்வேர்டு செய்துவிட்டதாகவும், . மற்றொரு நண்பர் அதனை படித்துவிட்டு தவறாக இருக்கிறது என சுட்டிக்காட்டியவுடன் அதனை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். தனிமனித ஒழுக்கத்திற்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனிமனித விமர்சனங்களில் தனக்கு என்றும் விருப்பம் கிடையாது என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் தான் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த பதிவை நீக்கிவிட்ட பின்னரும் தொடர்ந்து ஸ்கீரின்ஷாட் எடுத்து போடுபவர்களுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாகவும் எஸ்.வி.சேகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
#SVSekar #SVeShekher apologise letter pic.twitter.com/b5rB1M7WlO
— IndiaGlitz - Tamil (@igtamil) April 20, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com