close
Choose your channels

துணிவிருந்தால் கைது செய்யுங்கள்: எஸ்.வி.சேகர் சவால்

Monday, May 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்ததாக எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே பத்திரிகையாளர் உள்பட அனைவரும் எதிர்பார்த்தனர்

ஆனால் பாஜகவின் முக்கிய பிரமுகர் மற்றும் தமிழக அரசின் உயர்பதவில் உள்ள ஒருவரின் உறவினர் என்பதால் காவல்துறை எஸ்.வி.சேகரை கைது செய்ய தயங்குவதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் எஸ்.வி.சேகரை தனிப்படைகள் தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எஸ்.வி.சேகர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, 'ஆம் எஸ்.வி.சேகரை நான் பார்த்தேன். ஆனால் கைது செய்ய வேண்டியது என் வேலையல்ல என்று கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த எஸ்.வி.சேகர், 'தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், துணிவிருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பின்னராவது காவல்துறை எஸ்.வி.சேகரை கைது செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment