அரசியல் உள்பட எந்த வியாதியும் இல்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், அரசியல் உள்பட எந்த நோயும் தனக்கு இல்லை என்றும், தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் அந்த நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர் என்பதும், இவர் தற்போது கூட மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், சற்றுமுன் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் கடந்த இரண்டு நாட்களாக வெர்டிகோ பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக செய்திகளை பார்த்தேன். விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பலர் பதிவு செய்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு அந்த நோய் வந்தது, அதை மருத்துவர்கள் ஒரே நாளில் குணமாக்கி விட்டார்கள்.
என் பெயரில் போலியான ஐடி எதுவும் உருவாக்கி, இதுபோன்ற வதந்திகள் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தற்போது நலமாக உள்ளேன். அரசியல் உள்பட எந்த விதமான நோயும் எனக்கு இல்லை.
கடந்த மாதம் வீசிங் பிரச்சனை வந்தது, அதையும் சில நாட்களில் மருத்துவர்கள் குணமாக்கி விட்டார்கள். நேற்று தான் 'காதுல போ' என்ற நாடகத்தை போட்டேன். எனது உடல் நிலை குறித்து நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நான் நலமாக இருப்பதாக அனைவருக்கும் தெரிவிக்கிறேன். கடவுள் அருளால் நன்றாக இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் நலமே. pic.twitter.com/JjIJIxEVi3
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) October 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com