உங்க அப்பா உங்களுக்கு சொல்லித்தரலையா? ஸ்டாலினுக்கு எஸ்.வி.சேகர் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, 'பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு தூத்துக்குடி தொகுதிதான் கிடைத்ததா. வசமாக வந்து மாட்டிக் கொண்டீர்களே. தோற்பதற்காகவே வந்துள்ளீர்களா, டெபாசிட் இழக்கப் போகும் அவருக்கு எனது அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கட்சியே சதி செய்து அவரை இங்கே தள்ளிவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்” என்று பேசினார்.

ஸ்டாலினின் இந்த் பேச்சுக்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உங்களுக்கு ஆர்.கே.நகர்ல ஆனது மறந்து போச்சா. கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு அப்பா சொல்லித்தரலியா? இந்த தேர்தலில் ஒரு மவுனப்புரட்சி நடக்கும். பாருங்கள். இல்லை வீரமணி சொல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்த அதே ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை வாங்கியுள்ளார் என்று எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது