தபால் ஓட்டு தாமதம்: ரஜினிக்கு எஸ்.வி.சேகர் அதிரடி பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்தில் வாக்களிக்க தனக்கு தபால் வாக்கு படிவம் தாமதமாக வந்ததால் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என்றும், அதனால் தான் வருந்துவதாகவும், இனிமேல் இவ்விதம் நிகழாமல் இருக்க வேண்டும் என்றும் நேற்றிரவு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த டுவீட்டுக்கு எஸ்.வி.சேகர் தனது பாணியில் பதிலளித்துள்ளார். அதில், 'ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் மட்டும் தபால் ஓட்டுக்களை தாமதமாக பெறவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நடிகர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலுக்கான வழிமுறைகளும் ஏற்பாடுகளும் சரியில்ல்லை. எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பதிவாளர் தேர்தலை நிறுத்தியதால் தேர்தல் குறித்த பணிகளும் நிறுத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் மீண்டும் நீதிமன்றத்தின் உத்தரவால் நடிகர் சங்க தேர்தலை நடத்த திட்டமிட்டதால் அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டதாகவும், அதில் ஒன்றுதான் தபால் ஓட்டுக்கள் சரியான நேரத்திற்கு சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது. தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்திருந்தால் இந்த குழப்பங்கள், குறைகள் இல்லாமல் தேர்தல் நடந்திருக்கும் என்பதே பல நடிகர், நடிகைகளின் கருத்தாக உள்ளது
Dear RAJINI You are not the only person was unable to cast your VOTE , there are 100s of out station Drama artists are in the same condition. As a protest for this kind of disorganised Election Process & arrangements, I AM BOYCOTTING THIS NADIGAR SANGAM ELECTION. ???????????? https://t.co/0STccWCCUQ
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) June 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout