close
Choose your channels

என்னுடன் நடிக்க பயந்தார்.. வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான்: சித்தார்த் குறித்து எஸ்.வி.சேகர்..!

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னுடன் நடிக்க சித்தார்த் பயந்தார் என்றும், அவர் வெறும் வாய் பேச்சு தான் என்றும் உதயநிதிக்கு இருந்த தைரியம் கூட சித்தார்த்துக்கு இல்லை என்றும் நடிகர் எஸ்வி சேகர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’டெஸ்ட்’ என்ற படத்தில் நடிக்க இயக்குனர் என்னை அந்த படத்தின் தயாரிப்பாளர் அணுகினார் என்றும் நானும் சம்மதித்தேன் என்றும் கூறிய எஸ்வி சேகர், அதன் பிறகு சில நாட்கள் கழித்து அதே இயக்குனர் என்னிடம் வந்து ’நீங்கள் இந்த படத்தில் நடித்த சித்தார்த் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் என்றும் கூறினார்.

’நான் சித்தார்த்திடம் பேசுகிறேன்’ என்று சொன்னபோது ’இல்லை நான் ஏற்கனவே பலமுறை பேசி விட்டேன், அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். நீங்கள் பிஜேபி கொள்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறீர்கள் என்பதால் தான் உங்களுடன் நடித்தால் அவரை இணையத்தில் கேலிச் செல்வார்கள் என்று சித்தார்த் கூறியதாகவும் தயாரிப்பாளர் கூறியதாக எஸ் வி சேகர் தெரிவித்தார்.

அவர் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது என்று கூறிய எஸ்.வி. சேகர், நான் படப்பிடிப்பு தளத்தில் வந்து ’மோடி வாழ்க’ என்று சொல்லப் போவதுமில்லை, சித்தார்த் மோடி ஒழிக என்று சொல்லப் போவதில்லை. எனக்கு கொடுக்கும் டயலாக்கை மட்டும் தான் நான் பேசப்போகிறேன், அப்படி பார்த்தால் அதே படத்தில் மாதவனுடன் சேர்ந்து சித்தார்த் நடிக்கிறார். என்னைவிட நடிகர் மாதவன் மோடியை மிகவும் பின்பற்றுபவர் அப்படி என்றால் சித்தாந்தத்திற்கு பாஜக பிரச்சனை இல்லை, நான் தான் பிரச்சனை என்று கூறினார்.

மேலும் உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நான் நடித்த போது, நான் நடிப்பது சந்தோஷம் என உதயநிதி கூறினார். கட்சியையும் சினிமாவையும் அவர் குழப்பாமல் இருந்தார். அவருக்கு இருந்த தைரியம் கூட ஏன் சித்தார்த்துக்கு ஏன் இல்லை என்று எனக்கு தெரியவில்லை, அவர் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான்’ என்றும் கூறினார். எஸ்வி சேகரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment