ரஜினி முதல்வர் ஆவார்! பாஜக தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது: பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,October 01 2019]

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி பங்கேற்று முதல்வர் ஆவார் என்றும், பாஜக தயவின்றி இனி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எஸ்வி சேகர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்று நான் ஏற்கனவே கூறினேன். அதன்படி மாறிவிட்டது. புதிய தலைமை யார் என்பதை விரைவில் டெல்லி தலைமை முடிவு செய்யும்

மேலும் ரஜினி கண்டிப்பாக வரும் தேர்தலில் பங்கேற்பார். அவர் முதலமைச்சராக கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலும் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அதே போல பாரதிய ஜனதா கட்சியின் தயவு இல்லாமல் எந்த கட்சியும் இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று எஸ்.வி.சேகர் கூறினார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More News

நான் ஜெயிச்சிட்டேன்: வைரலாகும் தர்ஷனின் முதல் வீடியோ

பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த தர்ஷன் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் வெளியேறினார்.

மீரா செய்யும் யோகாவை கிண்டல் செய்யும் சாண்டி-முகின்

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாத்திமாபாபு, ரேஷ்மா, மீரா மிதுன் மற்றும் மோகன் வைத்யா ஆகிய நால்வர் நேற்று வந்திருந்த நிலையில் இன்றும் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று செல்லும் விருந்தினர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நான்கு போட்டியாளர்களை உற்சாகப்படுத்த

'தளபதி 64' படத்தில் இணைந்த இளம் ஹீரோ!

தளபதி விஜய் நடிக்க உள்ள 'தளபதி 64' படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்துள்ளது குறித்து நேற்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

'இந்தியன் 2' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படமான 'இந்தியன் 2'படத்தின்