நித்தியானந்தாவின் 'கைலாஷ்' நாட்டிற்கு எஸ்.வி.சேகர் பிரதமரா?
- IndiaGlitz, [Friday,December 13 2019]
கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இம்மாதம் 18-ம் தேதிக்குள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் பெங்களூரு காவல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கொண்டே வீடியோ மூலம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, தான் கைலாஷ் என்ற நாட்டை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், இந்நாட்டின் குடிமகனாக இந்து என்ற ஒரே ஒரு தகுதி போதும் என்றும் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் இது குறித்து நடிகர் எஸ்வி சேகர் கூறியபோது ’நித்யானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு பிரதமர் பதவியை எனக்கு கொடுத்தால் தான் அவ்வப்போது வந்து பிரதமர் பதவியை கவனித்துக் கொள்ள தயார் என்றும் தனக்கு மனைவி குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகள் இருப்பதால் தன்னால் முழுநேரமாக பிரதமர் பதவியில் ஈடுபட முடியாது என்றும் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்
கைலாஷ் என்ற நித்தியானந்தா அறிவித்த நாடே போலியானது என்று ஏற்கனவே ஈக்வடார் தூதரகம் மற்றும் ஈக்வடார் அரசு அறிவித்துள்ள நிலையில் இல்லாத ஒரு நாடான கைலாஷ் நாட்டின் பிரதமராக தான் தயார் என எஸ் வி சேகர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது