'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்
- IndiaGlitz, [Tuesday,October 22 2019]
விஜய் படம் என்றாலே பாஜக அல்லது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு. மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்புகளால் தான் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிகில் விஜய்க்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வித்தியாசமான காஸ்ட்யூம்களில் விஜய் நடித்துள்ளார் என்பது வெளிவந்து கொண்டிருக்கும் போஸ்டர்களில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் பிகில் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி 'செல்லும் ரசிகர்கள் இதே உடையில் செல்ல இந்த காஸ்ட்யூம்களை வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர், ‘இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா. விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா’ என்று எஸ்வி சேகர் குறிப்பிட்டு விஜய்க்கும் பிகில் படக்குழுவினர்களுக்கும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா.1/2 https://t.co/ZNQRvlJEWl
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) October 22, 2019