கருணாநிதியை நேரில் சந்தித்த பாஜக ஆதரவு நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை ஓரளவு தேறி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் கருணாநிதியின் இல்லம் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று கருணாநிதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நேற்று இரவு 8.45 க்கு கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரால் பேச இயலவில்லையானாலும் மலர்ந்த சிரிப்புடன் என்னைப்பார்த்தார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என சொல்லி GET WELL SOON card ஐ கொடுத்தேன். கலைஞரின் மனோ தைரியம் Will power ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டிய குணம்' என்று பதிவு செய்திருந்தார்

அரசியலிலும் கொள்கையிலும் கருணாநிதியுடன் வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் கூட வயது, அனுபவம் மற்றும் மரியாதை நிமித்தம் காரணமாக அவரை சந்தித்து வருவது தமிழக அரசியல் நாகரீக பாதையை நோக்கி செல்வதையே காட்டுகிறது.


 

More News

நடிகர் நாகார்ஜூனன் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால்

எஸ்.ஏ.சியின் 'டிராபிக் ராமசாமி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்

டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பிரபல இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

லேடி சூப்பர் ஸ்டாரின் 'அறம்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் அளித்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் மிகப்பொருத்தம் என்பது அவரது 'அறம்' படம் நிரூபித்து வருகிறது.

மூன்றே நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கிய 'அறம்'

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் குறிப்பாக இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டி வசூல் செய்தது