விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம்: எஸ்.வி.சேகர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியில் மீண்டும் நாசர், விஷால் கார்த்தி ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை' என்று கூறினார்.
மேலும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், '300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மோடி, மீண்டும் பிரதமராவார். 23ஆம் தேதிக்கு பிறகு அது தெரியும். தமிழகத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் தினகரனைக் காட்டிலும் கமல் அதிக வாக்குகளைப் பெறுவார் என்று கூறிய எஸ்.வி.சேகர், 'காஷ்மீரில் தமிழன் அதிகாரியானால் சந்தோஷப்படும் நாம், தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வேலைபெறுவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், 7 பேர் விடுதலை, அனிதா தற்கொலை என அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout