2024ஆம் ஆண்டிலும் மோடி தான் பிரதமர்: பிரபல நடிகர் டுவீட்

காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமர்களில் அதிக நாட்கள் பிரதமராக இருந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்கலால் நேரு அவர்கள் தான். அவர் 6,130 நாட்கள் பிரதமராக இருந்தார். அதனை அடுத்து இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அதிக நாட்கள் பிரதமராக இருந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை அல்லாதவர்களில் வாஜ்பாய் மட்டுமே 2272 நாட்கள் பிரதமராக இருந்து சாதனை செய்தார். இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை இன்றுடன் பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்துள்ளார். இன்னும் அவர் சுமார் நான்கு ஆண்டுகள் பிரதமராக இருக்க உள்ளார் என்பதால் நாளை முதல் நபர் காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் ’வாழ்த்துக்கள் மோடி அவர்களே! நீங்கள் தான் 2024ஆம் ஆண்டிலும் பிரதமர்’ என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் எஸ்வி சேகரின் இந்த பதிவிற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்கும் நடிகராக இருந்தார்.

இபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசர காரியமாக செல்ல வேண்டுமென்றால்

தற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்!

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.