நீங்கள் செய்வது 100% சரி, தயங்காமல் செய்யுங்கள்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்து கூறிய பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வரும் நிலையில் அவரது நிவாரண உதவிகள் குறித்து கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பழம்பெரும் காமெடி நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் தனது சமூக வலைத்தளத்தில் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
விமர்சனங்களை புறந்தள்ளுங்கள். நீங்கள் செய்வது 100% சரி. நம் ஊருக்கு நம் மக்களுக்கு வெற்று அனுதாபம் தேவையில்லை. உதவிகள் தான் தேவை. உங்கள் பிரபலம் உங்கள் ஊருக்கு உதவுகிறது என்றால் தயங்காமல் செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்
முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் ’என் கலையும் கடமையும் நான் யார் என்பதை நிரூபிப்பது அல்ல, நீங்கள் யார் என்று உங்களுக்கு நிருபிப்பது’ என்று பதிவு செய்திருந்தார்.
Dear MAARI selvaraj
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 21, 2023
விமர்சனங்களை புறந்தள்ளுங்கள். நீங்கள் செய்வது 100% சரி. நம் ஊருக்கு நம் மக்களுக்கு வெற்று அனுதாபம் தேவையில்லை. உதவிகள்தான் தேவை. உங்கள் பிரபலம் உங்கள் ஊருக்கு உதவுகிறது என்றால் தயங்காமல் செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
எஸ்வி சேகர்.🙏🇮🇳🙏 pic.twitter.com/SY1PWjDSY2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments