கமல் லட்டரை படிச்சு முடிக்கிறதுக்குள்ள கொரோனாவே போயிடும்: பாஜக பிரபலம் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்ததை அடுத்து தற்போது ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் ஒரு நீண்ட கடிதத்தை பிரதமருக்கு எழுதினார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் பொது மக்கள், குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகுந்த கஷ்டப்படுவதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் பட்ட கஷ்டத்தை விட மிக மோசமான பாதிப்பு பிரதமரின் இந்த ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையால் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கிட்டத்தட்ட ஆறு பக்கங்கள் கொண்ட கமல்ஹாசனின் நீண்ட கடிதத்தை சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டினாலும் பாஜகவினர் ஒருசிலர் கிண்டலடித்து வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூட தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கடிதம் கொடுத்து கிண்டலடித்து இருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கமலஹாசனின் பெரிய லெட்டர் கொடுத்து கிண்டலடித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும். https://t.co/rEXTADHjRf
— S.VE.SHEKHER???? (@SVESHEKHER) April 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments