எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் ஃபார்வேடு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காரணமாக எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப எஸ்வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும், பெங்களூரில் சொந்த வேலையாக இருப்பதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் சென்னை திரும்பவுள்ளதாகவும் எஸ்.வி.சேகர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,. இந்த மனுவில், இந்த விவகாரத்தில் தான் தவறை உணர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் அந்த பதிவை தான் எந்தவித. உள்நோக்கத்துடனோ, குற்ற எண்ணத்துடனோ பகிரவில்லை என்றும், இதனால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இந்த முன் ஜாமீன் மனு நாளை அல்லது நாளை மறுதினம் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com