எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரின்பேரில் எஸ்.வி.சேகர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஒத்தி வைத்த ஐகோர்ட், எஸ்.வி.சேகரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பியது.
இருப்பினும் இன்று வரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com